PTEC News
  • [18/Mar/2024]
    Examen_Français_&_Ma_2024
    Chers parents, Le troisième et dernier trimestre de l’année se profile. Votre enfant va entrer dans des périodes d’intenses révisions en vue .. more
  • [24/Feb/2024]
    Coming Events
    * 24/02/2024 : Début d'inscription pour examen Fr & Maths * 2,3 Mars : தாய் மொழிகள் தின கவிதை, கட்ட.. more
View All
PTEC info
Inscription_Fr_Maths-2024
Examen_Fr_Maths
Examen_Fr_Maths_2022
Pub2019
Carrom_Rules
Groupes-Culture general_2021
Tamil_results_2023
Tamil Speech
Contact_us



" நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!  "


இப்பாடலின் பொருள், நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு, அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாகத் திகழ்கிற இந்தியக் கண்டத்தில், தென்னாடும் அதில் சிறந்த தமிழர்களின் நல்ல திருநாடும், பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்தத் திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல, அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருக்கின்ற பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே! இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!

840321 Visitors840321 Visitors840321 Visitors840321 Visitors840321 Visitors840321 Visitors840321 Visitors