கல்வி நிலைய கீதம்
அழகிய பாரிஸ் நகரினிலே
அரும் பெரும் மொழியறிவூட்டிடவும்
அவனியில் எம்மை உயர்த்திடவும்
அமைந்தது எங்கள் நிலையமது.
வாழ்க நீடு வாழியவே
வளர்க கல்வி வளம்பெறவே
வாழ்க நீடு வாழியவே
வளர்க கல்வி வளம்பெறவே.
எங்கே நம்மவர் சென்றாலும்
எந்நிலைதனை அவர் அடைந்தாலும்
எம் தாய்மொழிதனை மறப்பாரோ
எம்புகழ்தனை எங்கும் பரப்பாரோ.
வாழ்க நீடு வாழியவே
வளர்க கல்வி வளம்பெறவே
வாழ்க நீடு வாழியவே
வளர்க கல்வி வளம்பெறவே.
நாமனை வோரும் இணைந்திடுவோம்
நானிலம் போற்ற வளர்ந்திடுவோம்
நம்புகழ் உலகில் பரப்பிடுவோம்
நாமவர் நல்லன பகிர்ந்திடுவோம்.
வாழ்க நீடு வாழியவே
வளர்க கல்வி வளம்பெறவே
வாழ்க நீடு வாழியவே
வளர்க கல்வி வளம்பெறவே.
பாரினில் பலமொழி கற்றிடவே
பைந்தமிழ் சிறுவர்க் கூட்டிடவே
பரிந்து அறிவைப் புகட்டப் பாரிஸ்
தமிழர் கல்வி நிலையம் அமைந்ததுவே.
வாழ்க நீடு வாழியவே
வளர்க கல்வி வளம்பெறவே
வாழ்க நீடு வாழியவே
வளர்க கல்வி வளம்பெறவே.






